அத்வைத வேதாந்தத்தை நிலைநிறுத்திய தலையாய குருநாதரும், சிவபெருமானின் அவதாரமாகக் கொண்டாடப்படுபவருமான ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் புகழ்மிகு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை ஸ்தாபித்தார். சிருங்கேரி சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியாக வீற்றிருக்கும் தற்போதைய ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் உபதேசங்கள், “சிருங்கேரி சங்கராசார்யாள்” என்னும் இந்த 32 பக்க வண்ணப்படக்கதையில் உயிரோட்டமுள்ள ஓவியங்களின் மூலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. “மனிதர்களின் முன் கடவுள் உருவமுடன் தோன்றுவாரா?, இறைவன் பாரபட்சம் மிக்கவரா?, இறைவன் எவ்வாறு ஒருவருக்கு அருள் புரிகிறார்? ஒருவன் தனது வாழ்க்கையில், தனக்கென்று எதை சம்பாதித்து சேர்த்து வைக்க வேண்டும்?” - இதுபோன்ற கேள்விகளுக்கு ஜகத்குருவின் கருத்தாழமிக்க பதில்கள், குழந்தைகள் பெரியவர்கள், என இருதரப்பினரையும் கவரும் வண்ணம் இப்புத்தகத்தில் சுவாரசியமாக வழங்கப்பட்டுள்ளன.